Saturday 4th of May 2024 07:21:27 PM GMT

LANGUAGE - TAMIL
-
குா்திஸ் எழுத்தாளர்  பெஹ்ரூஸ் பூச்சானிக்கு  அகதி அந்தஸ்து வழங்கியது நியூசிலாந்து!

குா்திஸ் எழுத்தாளர் பெஹ்ரூஸ் பூச்சானிக்கு அகதி அந்தஸ்து வழங்கியது நியூசிலாந்து!


அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்த்து மறுக்கப்பட்டு ஆறு வருடங்கள் மனுஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டிருந்த குா்திஸ் ஊடகவியலாளரும் எழுத்தாளருமான பெஹ்ரூஸ் பூச்சானிக்கு (Behrouz Boochani) நியூசிலாந்து அகதி அந்தஸ்து வழங்கியுள்ளது.

இதனை நியூசிலாந்து குடிவரவு திணைக்களம் இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

ஆறு வருடங்களுக்கு முன்னர் தஞ்சம் கோரி அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் வந்த பெஹ்ரூஸ் பூச்சானி மனுஸ் தீவுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு தடுத்துவைக்கப்பட்டிருந்தார். அவருக்கு அகதி அந்தஸ்த்து வழங்க அவுஸ்திரேலியா தொடா்ந்து மறுத்து வந்தது.

இந்நிலையில் சிறையில் இருந்தவாறு அங்குள்ள அதிகளின் பேச்சாளராக செயற்பட்டு தடுத்துவைக்கப்பட்ட பெஹ்ரூஸ் பூச்சானி, நீண்ட கால அகதிகளின் பிரச்சினைகள் தொடா்பில் சா்வதேச அளவில் பரப்புரை செய்துவந்தார்.

மனுஸ் தீவிலிருந்த காலப்பகுதியில் பெஹ்ரூஸ் பூச்சானி தனது அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதிய ‘நண்பன் இல்லை ஆனால் மலைகள்‘ (No Friend But the Mountains) என்ற நூலுக்கு விக்டோரிய அரசின் உயர் இலக்கிய விருது கிடைத்தது.

ஆனாலும் அவர் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், கடந்த வருடம் நவம்பர் மாதம் நியூசிலாந்தில் நடைபெற்ற இலக்கிய நிகழ்வுக்கு அந்நாட்டு அமைப்பொன்று அழைத்ததின் பேரில் பெஹ்ரூஸ் பூச்சானி விருந்தினர் விசாவில் சென்றிருந்தார்.

அங்கிருந்து மீண்டும் அவுஸ்திரேலியாவுக்குச் செல்லப்போவதில்லை எனத் தெரிவித்த பெஹ்ரூஸ் பூச்சானி, நியூசிலாந்தில் அகதி அந்தஸ்துக்கு விண்ணப்பித்துக் காத்திருந்தார். இந்நிலையில் அவரது கோரிக்கையை ஏற்று அகதி அந்தஸ்து வழங்கியுள்ளதாக நியூசிலாந்து இன்று உத்தியோகபூா்வமாக அறிவித்துள்ளது.


Category: உலகம், புதிது
Tags: நியூசிலாந்து



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE